மோடியை சந்தித்தார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்
12 புரட்டாசி 2026 சனி 05:14 | பார்வைகள் : 185
பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டில்லி வந்துள்ளனர். அந்த வகையில், டில்லி வந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
முன்னதாக, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை பிரதமர் மோடி சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பான கடல் வழிப் பயணத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய பின்னர், ஈரான் அதிபர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்பு பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின்போது, பிரதமர் மோடி மசூத் பெசெஷ்கியானை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



