மோகன் பாகவத்துக்கு அமித்ஷா பாராட்டு
12 புரட்டாசி 2026 சனி 11:33 | பார்வைகள் : 164
தேசமே முதன்மை என்ற உணர்வை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ஆர்எஸ்எஸ் தலைவர் பொறுப்பை வகித்து வரும் மோகன் பாகவத், தேச சேவை, சமூக நல்லிணக்கம் மற்றும் இந்திய கலாசாரத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
சமூகத்தைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைவர் என்ற முறையில், சேவை மனப்பான்மை, நற்பண்புகள் மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதன் வாயிலாக, சமூகத்தில் தேசமே முதன்மை என்ற உணர்வை வலுப்படுத்தி வருகிறார்.
அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.



