உதவி கேட்டுவிட்டு சங்கிலி பறிப்பு – 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!!

உதவி கேட்டுவிட்டு சங்கிலி பறிப்பு – 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!!

12 புரட்டாசி 2026 சனி 15:06 | பார்வைகள் : 1615


Seine-et-Marne மாவட்டம் Chelles நகரில் 80 வயது மூதாட்டியிடம் உதவி கேட்ட இரு இளைஞர்கள், அவரிடம் இருந்து கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி அவர்களுக்கு sandwich வாங்கித் தருவதற்கு சம்மதித்த நிலையில், அவர்கள் அவரது நம்பிக்கையைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி Meaux குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். Chelles நகரில் இடம்பெற்ற இரண்டு வன்முறை கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில் ஒரு சம்பவத்தில், செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி avenue Foch பகுதியில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியும் பறிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் அந்த இளைஞர், தாம் வீடு சென்றபோதுதான் சங்கிலி திருடப்பட்டதை உணர்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

கழுத்துச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட இளைஞர் தாம் தற்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், வீதியில் இனி earphones கூட அணிய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் 80 வயது மூதாட்டியிடம் இடம்பெற்ற கொள்ளைக்குப் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை ஒரு இறைச்சிக் கடைக்காரரும் அவரது ஊழியரும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது Meaux நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. 

தொடர்ந்து படிக்க