பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து அணி - தொடர் நாயகன் விருதுபெற்ற இருவர்

பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து அணி - தொடர் நாயகன் விருதுபெற்ற இருவர்

12 புரட்டாசி 2026 சனி 17:30 | பார்வைகள் : 185


பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எட்ஜ்பாஸ்டனில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்தது.

பாகிஸ்தான் நிர்ணயித்த 130 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

அதனைத் தொடர்ந்து கைகோர்த்த ஜோர்டன் காக்ஸ், ஜோ ரூட் கூட்டணி வெற்றிக்கு வித்திட்டது. இங்கிலாந்து அணி 24.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஜோ ரூட் (Joe Root) 69 பந்துகளில் 62 ஓட்டங்களும், ஜோர்டன் காக்ஸ் (Jordan Cox) 59 ஓட்டங்களும் எடுத்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  

இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் பாகிஸ்தானின் மொஹம்மது அப்பாஸ் இருவரும் தொடர் நாயகன் விருது பெற்றார்கள்.

 

தொடர்ந்து படிக்க