பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சிக்கு முன்மொழிவு இல்லை: மத்திய அரசு
13 புரட்டாசி 2026 ஞாயிறு 06:39 | பார்வைகள் : 185
பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
டில்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியுள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான், பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முதல் நாளில் பிரிக்ஸ் டில்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
உலக அமைதி, ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தையும் பயன்பாட்டையும் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், 'டி-டாலரரைசேஷன்' நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் உள்ளூர் நாணயங்களிலேயே மேற்கொள்வதில் மட்டுமே தற்போது முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.



