மின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

மின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

13 புரட்டாசி 2026 ஞாயிறு 07:41 | பார்வைகள் : 164


மின் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிர்மல்குமார் கூறியதாவது:

காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, கடந்த இரு நாட்களாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தப் பற்றாக்குறை தமிழகத்தில் மட்டுமின்றி, பெரும்பாலான மாநிலங்களிலும் நிலவியது.

நேற்று முன்தினம் மாலை தமிழகத்தின் தேவைக்கேற்ப மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்பின்னர், அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று மாலை முதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க