அமைச்சர்கள் தலைமையில் த.வெ.க., தேர்தல் பணிக்குழு; முதல்வர் விஜய் அறிவிப்பு
13 புரட்டாசி 2026 ஞாயிறு 09:45 | பார்வைகள் : 212
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, த.வெ.க., சார்பில் தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் நியமித்துள்ளார்.
இரு தொகுதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் தொகுதி:
தேர்தல் பணிக்குழுவின் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோரும், துணை பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.,க்கள் சரவணமூர்த்தி, தியாகராஜன், விஜயராஜ், காமராஜ் மற்றும் த.வெ.க., செங்கல்பட்டு மாவட்ட செயலர் பாலாஜி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தொகுதி:
தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரும், துணை பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ.,க்கள் பாலமுருகன், சத்யபாமா, ராம்குமார், திலீப், சத்யா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



