மேற்காசியா, வளைகுடாவில் அமைதிக்கு சீனா தயார்: ஜின்பிங்
13 புரட்டாசி 2026 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 177
மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் அமைதி திரும்புவதற்காக, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக, பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பேசியதாவது:
மேற்காசியா மற்றும் வளைகுடா பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்காசியாவில் நிலவி வரும் போர், அப்பகுதி மக்களுக்கு கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்ததல்ல.
மேற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, மற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக நிற்க வேண்டும். சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.



