சுரங்கப்பாதையில் பற்றி எரிந்த மகிழுந்து - 2 பேர் உயிரிழப்பு!!
12 புரட்டாசி 2026 சனி 22:30 | பார்வைகள் : 1544
Yvelines மாவட்டம் Mantes-la-Ville பகுதியில் A13 நெடுஞ்சாலையின் சுரங்கப்பாதையில் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை மாலை மகிழுந்து ஒன்று திடீரென தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Province–Paris திசையில் பயணித்த மகிழுந்தில் இருந்த மூவரும் தீயில் சிக்கிக்கொண்டனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவ இடத்துக்கு 31 அவசரகால மீட்பு வாகனங்களுடன் மொத்தம் 74 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபர் தீயிலிருந்து மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
Mantes-la-Ville பகுதியில் மூடப்பட்ட சுரங்கப்பாதைக்குள் தீ விபத்து ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் மிகவும் சிக்கலானதாக இருந்தன. தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், A13 நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. Paris–Normandie இடையே செல்லும் A13 நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக பல கடுமையான விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



