ஆண்கள் இன்னொரு பெண்ணை தேடிச்செல்ல காரணங்கள்
19 ஆடி 2016 செவ்வாய் 10:46 | பார்வைகள் : 14244
மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிற பெண்களை, நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை. திருமணமானவர்களுள் ஆண்கள் சிலர் தன் மனைவியைவிட்டு வேறு பெண்களை நாடி செல்லவது சர்வ சாதாரண விடயமாக போய் விட்டது.
ஏனெனில் இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததாலும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்க பிற பெண்களை நாடுகிறார்கள். திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும். ஆனால் அதிகளவானவர்களின் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆயிற்று' முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம்...
திருமணமான புதிதில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிகொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.
மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள். இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர்மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள்.
செக்ஸ் என்பது இருவரது உணர்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை. மனைவிமார்களே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து கதையுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து மேலும் உங்கள் கணவர் உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும் தனியாக மனைவிமட்டுமல்ல ஆண்களும் உங்களது விருப்பங்களை சொல்வது மட்டுமல்ல, பெண்களின் கருத்துக்களையும் நீங்கள் ஏற்க வேண்டும்.
அப்பொழுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம்.
இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. கணவர்மார்கள் எப்பொழுதும் தங்களது மனைவிமார் தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கணும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ மனைவி தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்கள் தங்களது மனைவி மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது.
அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாறவே செய்கிறது. இது காலப் போக்கில் காதலாக மாறிவிடுகிறது குழந்தைகள் பிறந்ததும் மனைவிமார்கள் குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பித்தால் அது கணவர்களை வெறுப்பை ஆக்கி விடுமாம்.
இதுவும் கூட மனைவியரிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம். இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் கணவர்கள், பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire