பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள்
22 சித்திரை 2014 செவ்வாய் 06:47 | பார்வைகள் : 17479
பெண்களிடம் பொழுது போக்கிற்காக பழகும் ஆண்களை அறிய வழிகள் காதல் என்ற அற்புதமான ஒன்றை பலர் சீரியஸாக செய்தாலும், சிலருக்கு இது ஒரு 'டைம் பாஸ்' போன்று உள்ளது. அப்படி காதலை டைம் பாஸாக செய்வது பெண்கள் தான் என்று ஆண்கள் சொல்வார்கள். ஆனால் ஒருசில ஆண்களும் காதலை டைம் பாஸ் போன்று செய்கிறார்கள்.
ஒரு பெண்ணை தன் வலையில் விழச் செய்ய ஆண்கள், அவர்களுக்கு பிடித்தவாறான பல செயல்களை மேற்கொள்வார்கள். டைம் பாஸ் ஆண்கள் மேற்கொள்ளும் சில செயல்கள் உள்ளன. அவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.
அதைப் படித்து பெண்களே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் காதலன் பொழுது போக்கிற்காக பழகுகிறான் என்றால், உங்களுடன் நேரத்தை அதிகம் செலவிடமாட்டார்கள். அதுவே உண்மையான காதல் இருந்தால், எந்த வேலை வந்தாலும், அதை விரைவில் முடித்துவிட்டு, உங்களை பார்க்காமல் வீட்டிற்கு செல்லமாட்டார்கள்.
உங்கள் பாய் ஃப்ரண்ட் உங்களுடன் ரொமான்ஸாக இருப்பதற்கு மட்டும் நேரத்தை செலவழித்து வந்தால், உங்கள் காதலன் தவறான எண்ணத்தில் பழகுகிறான் என்று அர்த்தம். உங்கள் காதலன் உங்களை அவரின் பேச்சை கேட்டு அதன் கீழ் நடக்குமாறு உங்களை வற்புறுத்தினால் அத்தகைய காதலனை உடனே விட்டுவிடுங்கள்.
உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்று சொன்ன பின்னரும், உங்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல், அவர்களிடம் கடலை போட்டால், அத்தகையவரும் சரியான காதலனாக இருக்க முடியாது.
எப்போது உங்கள் காதலனின் தவறான செயலால் உங்கள் மனம் வருந்துகிறது என்று தெரிந்தும், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்காமல், தான் செய்தது சரி என்று நினைத்து அப்படியே பேசாமல் இருக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் மேலும் பழகுவதற்கு யோசிக்க வேண்டும்.
நீங்கள் போன் செய்யும் போது, அதை எடுக்காமல் இருப்பதுடன், மீண்டும் போன் செய்யாமல் இருப்பார்கள். இதற்கு ஒரு பக்கம் அதிகப்படியான வேலை காரணமாக இருந்தாலும், வேலை முடிந்ததும் உடனே போன் செய்யாமல் இருந்தால், அவருக்கு உங்கள் மேல் உண்மையான பாசம் இல்லை என்று அர்த்தம். நீங்கள் தவறான ஒருவனை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை அவர்கள் உங்களை நடத்தும் முறையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire