நம்பிக்கையில்..
15 பங்குனி 2012 வியாழன் 21:14 | பார்வைகள் : 18875
நிச்சயமற்ற
நாளை பொழுது
புலரும் என்ற
நம்பிக்கையில்
கரைந்து போகின்றது
சூரியன்...
விருட்சமாய்
ஓங்கி எழுவோம் என்ற
நம்பிக்கையில்
மண்ணில் புதையுண்டு
தற்கொலை செய்து
கொள்கின்றன விதைகள்..
கடலை
சென்றடைவோம் என்ற
நம்பிக்கையில்
தட்டுத் தடுமாறி
திசைகளில் இன்றி
விரைந்து ஓடுகின்றன
நதிகள்...
திரும்பி வருவோம்
என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு முறையும்
நுரையீரலை தொட்டு
வருகின்றது காற்று.
வருவான் சூரியன்
தமக்கும் வாழ்வு
கொடுப்பான் என்ற
நம்பிக்கையில்
தவமிருக்கும் மலர்கள்..
எழுந்தால்
நடக்கலாம் என்ற
அதீத நம்பிக்கையில்
தவளும் பிச்சுக்
குழந்தையின் பாதம்...
நாளைய பொழுதுகள்
நமக்காகவும் விடியலாம்
அன்று கனவில் வாழும்
உன் நினைவுகள்
நிஐயத்திலும் வாழும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கும் என் இதயம்..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire