கடல் நீரில் உப்புக்கரிப்பது ஏன்?
10 வைகாசி 2014 சனி 17:22 | பார்வைகள் : 21528
ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல்.
ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம். மழை பெய்து குளிரும் போது, வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது. கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன. அவை வெளியிடும் லாவாக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.
கடல்வாழ் ஜீவராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும். கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும். கடலில் தான் நதிகள் கலக்கின்றன. கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை. இதனால் நீர் வெளியேற்றம், உப்பு என எதுவும் வெளியேறாது.
சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி. அவ்வாறு ஆவியாகும் போது, உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும்.
இதுபோன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில் ஆவியாதல் தவிர வேறுவழியில் நீர் வெளியேறிக்கொண்டு இருந்திருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது. தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும், சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலை விகிதத்தில் இருக்கிறது.
கடல் நீர் உப்புக் கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும், வியர்வையும் உப்புக் கரிப்பது ஏன் என்றால் ‘லாக்ரிமல்’ சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. அதில் உப்பு வரக் காரணம். நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் ‘லாக்ரிமல்’ சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது.
வியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது. அதிலும் நம் உடலில் உள்ள உப்பு இருக்கும். உடல் செயல்படுவதால் ஏற்படும் வளர் சிதை மாற்றத்தால் உருவாகும் யூரியாவும் கலந்து வரும். அதனால் வியர்வையும் உப்புக் கரிக்கும்! அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி, தசை பிடிப்பு ஏற்படும். அதனைஈடு செய்ய அப்போது உப்பு சத்துள்ள திரவங்களை உட்கொள்ள வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire