Paristamil Navigation Paristamil advert login

உனக்கு சங்கு கன்பார்ம் மச்சி...!

உனக்கு சங்கு கன்பார்ம் மச்சி...!

17 கார்த்திகை 2014 திங்கள் 16:27 | பார்வைகள் : 16586


 இரண்டு நண்பர்கள் காட்டிற்குள் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது ஒருவனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அருகிலிருந்த டவுனுக்கு ஓடினான் மற்றொரு நண்பன். 

 
நண்பன் 1 : டாக்டர் என் நண்பனைப் பாம்பு கடித்து விட்டது. உடனே வந்து வைத்தியம் பாருங்கள்... 
 
டாக்டர் : சாரி, என்னால் முடியாது.  
 
நண்பன் 1 : ஏன் டாக்டர்? 
 
டாக்டர் : இந்த ஊரின் ஒரே டாக்டர் நான் தான். இப்போது பிரசவ வலியால் ஒரு பெண் துடித்துக் கொண்டிருக்கும் போது அவளை விட்டு விட்டு உன்னோடு என்னால் வர முடியாது....  
 
நண்பன் 1 : பிறகு என் நண்பனை நான் எப்படிக் காப்பாற்றுவேன்..? 
 
டாக்டர் : சரி, உனக்காக சில மருத்துவ முறைகளைச் சொல்லித் தருகிறேன்....
 
நண்பன் 1 : சரி, கூறுங்கள் டாக்டர்... 
 
டாக்டர் : சிறு கத்தி ஒன்றை எடுத்துக் கொள். பாம்பு கடித்த இடத்தில் சிறிதாக வெட்டு, பீறிட்டு வரும் ரத்தத்தை உறிஞ்சி கீழே துப்பு. உன் நண்பன் பிழைத்துக் கொள்வான்....
 
டாக்டரிடமிருந்து திரும்பி வந்த தன் நண்பனிடம் ஆவலாக பாம்பு கடி பட்ட நண்பன் கேட்கிறான்.... 
 
நண்பன் 2 : டாக்டர் என்ன கூறினார்..? 
 
நண்பன் : உன்னைக் காப்பாற்ற முடியாது... நீ செத்துப் போகப் போகிறாய் எனக் கூறினார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3