பெண்கள் கண்ணீர் விட்டால் நாடு தாங்காது ....
11 ஐப்பசி 2014 சனி 12:20 | பார்வைகள் : 16957
பெண்கள் கண்ணீர் விட்டால் நாடு தாங்காது என்பார்கள்.. அதெல்லாம் கிடையாதுங்க, அதெல்லாம் கப்சா.. ஆனால் அதை விட 'பெரிய பெரிய' வில்லங்கமெல்லாம் வருமாம்... எப்படின்னு பாருங்க.!
பெண்களை அழ வச்சா அதன் பின் விளைவுகளை ஆண்கள் சந்தித்தே ஆக வேண்டும். அதுவும் பெரும் பொருட் செலவில்.
பெண்கள் விடும் கண்ணீரில் ஒவ்வொரு 'சொட்டு'க்குப் பின்னாலும் எவ்வளவு பெரிய நஷ்டம் இருக்கு பாருங்க...!!
கண் கலங்கி வெளியேறும்போது 'லோரியல் ஐலைனர்' கெட்டுப் போகும்.. ஒரு ஐலைனரின் விலை ரூ. 650..!அடுத்து கண் புருவ முடிகளை அலங்கரிக்க உதவும் 'டயார் மஸ்கரா' அவுட்டு... அதன் விலையோ ரூ. 2500!.
அப்படியே கண்ணீர் கண்ணை விட்டு மெதுவாக வெளியேறி அழகான அந்தக் கன்னத்தில் 'லேண்ட்' ஆகும்.. அப்போது அது கன்னத்தில் பூசப்பட்ட 'டி அன்ட் ஜி பிளஷரை' காலி செய்து விடும், அதாவது கலைத்து விடும். அந்த பிளஷரின் விலை ரூ. 2500..!
கடைசியாக அந்த கண்ணீர் துளி.. தட்டுத் தடுமாறி உதடுகளை வந்தடையும்.. உதட்டில் அப்போதுதான் பூசப்பட்ட 'மைபெலைன் லிப்ஸ்டிக்' கலைஞ்சு போயிரும்.. லிப்ஸ்டிக் விலை ரூ. 350...!ஆக ஒரே ஒரு கண்ணீர்த் துளியால், நமக்கு ஏற்படும் செலவானது ரூ. 6000 ஆகும்..!!. எனவே மக்களே, இனிமேல் யாரும் பெண்களை அழ வச்சு வேடிக்கை பார்க்காதீங்கப்பா...அப்பறம் செலவை நம்மாள தாங்க முடியாது!!!!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire