Xல் நேரடி ஒளிபரப்பு; மார்க் ஜுக்கர்பெர்க் Vs எலான் மஸ்க் கேஜ் ஃபைட் உறுதி!
7 ஆவணி 2023 திங்கள் 12:06 | பார்வைகள் : 11215
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு எதிரான கேஜ் சண்டையை எலான் மஸ்க் உறுதிப்படுத்தினார்.
இருவருக்கும் இடையிலான கூண்டு சண்டை (cage fight) பற்றி எலான் மஸ்க் தனது சமூக ஊடகமான எக்ஸ் மூலம் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் (X) இந்த சண்டையை நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று எலோன் மஸ்க் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் தொகையை மூத்த குடிமக்களுக்கான தொண்டு நிதிக்கு வழங்குவதாகவும் மஸ்க் அறிவித்துள்ளார்.
எனினும் போட்டி பற்றிய வேறு தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை. மஸ்க் கூண்டு சண்டை என்றால் என்ன என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், X பற்றிய மற்றொரு குறிப்பில், மஸ்க் சண்டைக்கு கடுமையாக தயாராகி வருவதாக சுட்டிக்காட்டினார்.
ஜியு-ஜிட்சு சாம்பியனான ஜுக்கர்பெர்க்குடன் 'கேஜ் மேட்ச்'க்கு தயாராகி வருவதாக ஜூன் 20 அன்று மஸ்க் ஒரு பதிவில் கூறியபோது பிரச்சினை தொடங்கியது.பின்னர், ஜுக்கர்பெர்க் தான் வென்ற போட்டிகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மேலும் போட்டிக்கான இடத்தை அனுப்புமாறு மஸ்க்கைக் கேட்டுக் கொண்டார். அதற்கு மஸ்க் 'வேகாஸ் ஆக்டகன்' என்று பதிலளித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire