Paristamil Navigation Paristamil advert login

யூஎப்ஓ போல காட்சியளிக்கும் விசித்திர இளஞ்சிவப்பு மேகம்

யூஎப்ஓ போல காட்சியளிக்கும் விசித்திர இளஞ்சிவப்பு மேகம்

23 தை 2023 திங்கள் 11:55 | பார்வைகள் : 14096


 
துருக்கியில் யூஎப்ஓ (UFO) போல காட்சியளிக்கும் விசித்திர இளஞ்சிவப்பு மேகத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
துருக்கியில் உள்ள பர்சா நகரத்தில் மர்மமான மேகக் கூட்டம் உருவாகியுள்ளது. இந்த மேகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் யூஎப்ஓ (UFO) போல காட்சியளித்தது. யூஎப்ஓ போல காட்சியளிக்கும் இந்த விசித்திர இளஞ்சிவப்பு மேகத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
 
லெண்டிகுலர் மேகங்கள் என்று கூறப்படும் இவற்றை பார்த்து மக்கள் அனைவரும் திகைத்து நின்றனர். மேகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாகவும் பிறகு  இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறியது. சூரிய உதயம் போல தோன்றி நடுவில் பெரிய ஓட்டையுடன் காட்சியளித்த இந்த விசித்திர மேகம் சுமார் ஒரு மணி நேரம் அப்படியே இருந்தது.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2