ஹேக்கர்களை அழைப்பது நீங்கள் தான் - ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை
14 ஆனி 2022 செவ்வாய் 16:52 | பார்வைகள் : 19402
ஸ்மார்ட்போன் ஹேக்கிங் என்பது இப்போது அதிகமாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, முக்கியமான தகவல்கள் ஸ்மார்ட்போன் ஹேக்கிங் செய்து திருடுப்படுகின்றன.
ஹேக்கிங் செய்பவர்கள் நமக்கு தெரிந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. இணையத்தில் உலாவும் உங்கள் ஸ்மார்ட்போனை யார் வேண்டுமானாலும் ஹேக்கிங் செய்ய முடியும். ஹேக்கிங் செய்வதற்கு தொலைபேசி எண்கள் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. தொலைபேசி எண் இல்லாமல் கூட உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கிங் செய்யலாம்.
பலர் செல்போன் எண் தெரியாமல் யாரும் ஹேக்கிங் செய்ய முடியாது என்ற மாயை இருக்கின்றனர். அண்மையில் ஹேக்கிங் குறித்து பிரபல Bitdefender என்ற ஆன்டிவைரஸ் நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. புழக்கத்தில் இருக்கும் 35 விழுக்காடு ஸ்மார்ட்போன்கள் ஹேக்கர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறதாம். அதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட்போன் அப்டேட்டுகளை அவர்கள் குறித்த நேரத்தில் செய்திருக்கவில்லையாம்.
அந்த நிறுவனங்கள் வெளயிடும் ஸ்மார்ட்போன் அப்டேட்டுகளை யூசர்கள் சரியாக கவனித்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கொடுக்கும் பாதுகாப்பு அப்டேட்டுகள் கிடைக்காமல், ஹேக்கர்களின் குறிக்கு நீங்கள் இலக்காக நேரிடும். இதைத்தான் பைட் டிபெண்டர் ஆன்டிவைரஸ் நிறுவனமும் தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டு காட்டியுள்ளது. ஒரு சிலருக்கு அப்டேட் என்றால் என்ன? என்பது கூட தெரிவதில்லை என்று கூறியுள்ள அந்த நிறுவனம், சிலர் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இருப்பதாக கூறியுள்ளது. இதனால், ஹேக்கர்கள் அந்த ஸ்மார்ட்போனை குறிவைத்து சைபர் அட்டாக்கை நிகழ்த்துகிறார்களாம். பண மோசடி நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire