புதுமைகள் நிறைந்த மின்சார கார் அறிமுகம்!
10 சித்திரை 2021 சனி 09:40 | பார்வைகள் : 14351
விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள தனது ஐயோனிக்-5 (Ioniq 5 ) மின்சார கார் மூலம் பல புதுமைகளை செய்யலாம் என முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் தெரிவித்துள்ளது.
இந்த காரில் உள்ள பேட்டரியை பயன்படுத்தி திரெட்மில், பிரிட்ஜ், போர்ட்டபிள் மின்அடுப்பு உள்ளிட்டவற்றை இயக்கலாம். இந்த காரில் இருந்து இது போன்ற உபகரணங்களுக்கு மின்சாரத்தை எடுத்தாலும், காரின் இயக்கம் பாதிக்கப்படாத வகையிலான பேட்டரிகள் பயன்படுத்தப்படும்.
ஆண்டொன்றுக்கு கூடுதலாக 1500 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய உதவும் வகையில் சூரிய மேற்கூரை வாயிலாக பேட்டரியை சார்ஜ் செய்யவும் இந்த காரில் வசதி உள்ளது. முதற்கட்டமாக தென்கொரியாவில் ஐயோனிக் காரை அறிமுகம் செய்ய உள்ள ஹூண்டாய், விரைவில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதை விற்பனை செய்ய உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire