Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்களுக்கான Instagram உருவாக்கும் Facebook

சிறுவர்களுக்கான Instagram உருவாக்கும் Facebook

20 பங்குனி 2021 சனி 10:08 | பார்வைகள் : 14284


Facebook நிறுவனம், 13 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கான Instagram தளத்தை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

 
அரசாங்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், 13 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் தற்போது Instagram தளத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
 
பெற்றோரின் கட்டுப்பாட்டின் கீழ் Instagram தளத்தைப் பிள்ளைகள் பயன்படுத்துவது குறித்து நிறுவனம் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாயின. அதை நிறுவனம் உறுதிப்படுத்தியது.
 
இதற்கு முன், Instagram தளத்தில் பதின்ம வயதினரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில நடவடிக்கைகள் குறித்து நேற்று முன் தினம் நிறுவனம் அறிவித்தது.  

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2