Paristamil Navigation Paristamil advert login

ஆபத்தான நிலையில் WhatsApp!

ஆபத்தான நிலையில் WhatsApp!

25 மார்கழி 2018 செவ்வாய் 16:31 | பார்வைகள் : 14380


வாட்ஸ் ஆப் ஆனது பல நற்காரியங்களை செய்வதற்கு பயன்படுகின்றபோதிலும், அதிமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியும் வருகின்றது.

 
இதில் முக்கியமானது சிறுவர்களின் ஆபாசப்படங்கள் பரவுதல் ஆகும்.
 
வாட்ஸ் ஆப் குழுக்களின் ஊடாக இவ்வாறான ஆபாசப் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
 
பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
 
எனினும் இதுவரை வெற்றிகரமான முறையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை.
 
இதனால் வாட்ஸ் ஆப் மீதான நல்அபிப்பிராயம் குறைந்துகொண்டே வருகின்றது.
 
அண்மையில்கூட இவ்வாறான ஆபாச தகவல்களை பகிர்ந்த சுமார் 130,000 குழுக்களை 10 நாட்களில் நீக்கியுள்ளது வாட்ஸ் ஆப்.
 
இருந்தும் இது வெற்றிகரமானதாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3