iPhone 8 - iPhone X ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
13 புரட்டாசி 2017 புதன் 09:35 | பார்வைகள் : 17914
அப்பிள் space ship வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அப்பிள் வொட்ச் 3, அப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2017 ஐபோன் சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்யப்பட்டது, ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டமாக இருந்த அப்பிள் ஸ்பேஸ் ஷிப் (space ship) வளாகத்தின் முதல் விழாவில் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
அப்பிள் Watch3:
புதிய அப்பிள் வொட்ச் 3 பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் சிரி வசதி கொண்டுள்ளது, இத்துடன் அப்பிள் வொட்ச் 3 அப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது, அளவை பொருத்த வரை ஆப்பிள் வொட்ச் 2 போன்றே காட்சியளிக்கும் அப்பிள் வாட்ச் 3 முதல் முறையாக சிரி பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது, அப்பிள் W2 சிப்செட் கொண்டுள்ள அப்பிள் வொட்ச் ஒஎஸ் 4, அப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் கிடைக்கும்.
பல்வேறு நிறங்களில் கிடைக்கும் அப்பிள் வொட்ச் 3 செப்டம்பர் 15 ஆம் திகதி முன்பதிவு ஆரம்பித்து வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய வொட் 3 செல்லுலார் மொடல் விலை 399 டொலர்களில் துவங்கும் நிலையில் செல்லுலார் வசதியில்லா மொடல் விலை 329 டொலர்கள் முதல் துவங்குகிறது.
அப்பிள் டிவி 4K:
அப்பிள் வொட்ச் 3 சாதனத்தை தொடர்ந்து புதிய அப்பிள் டிவி 4K எச்.டி.ஆர். டிவியும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அப்பிள் டிவி எச்.டி.ஆர். வசதியுடன் டால்பி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய அப்பிள் டிவியை விட இருமடங்கு வேகத்தில் புதிய 4K டிவி இயங்கும் என்பதோடு 4K திரைப்படங்களின் விலை எச்டி விலையிலேயே வழங்கப்படும்.
அப்பிள் டிவி 4K விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் வசதி கொண்டிருக்கிறது. புதிய அப்பிள் டிவி 4K பிரத்தியேக ஸ்போர்ட்ஸ் செயலி வசதி கொண்டுள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான கேம்களையும் வழங்குகிறது. அப்பிள் டிவி செப்டம்பர் 15 ஆம் திகதி முன்பதிவு ஆரம்பித்து செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
அப்பிள் டிவி 4K 32 ஜிபி மாடல் விலை 179 டொலர்களும், 64 ஜிபி மாடல் விலை 199 டொலர்கள் முதல் துவங்குகிறது.
ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்:
புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது, இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது, இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.
அப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும், இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது, இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கெமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கெமரா வழங்கப்பட்டுள்ளது
புதிய ஐபோன் 8 கெமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் அக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது
ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி விலை 699 டொலர்கள் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி மொடல் விலை 799 டொலர்கள். ஐபோன் 8 சீரிஸ் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் X:
ஐபோன் 8 சீரிஸ்களை தொடர்ந்து ஐபோன் X ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்பிள் கீநோட் நிகழ்ச்சியில் அதிநவீன சாதனமாக புதிய ஐபோன் X அமைந்தது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436×1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐபோன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டாஸ்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது.
முக அங்கீகாரம் (face recognition) வழங்க டுயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கெமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
அப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோன் 12 எம்பி பிரைமரி டூயலே கெமரா அமைப்பு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.
இத்துடன் Dual OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது, ஐபோன் 7 மொடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மொடல்களில் கிடைக்கிறது, ஐபோன் X 64 ஜிபி விலை 999 டொலர்கள் மற்றும் 256 ஜிபி 1,149 டொலர்கள்.
பல்வேறு நாடுகளில் ஐபோன் X முன்பதிவு அக்டோபர் 27 திகதி ஆரம்பித்து விற்பனை நவம்பர் 3 ஆம் திகதி துவங்குகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire