வெளியானது புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசர்..!!
9 புரட்டாசி 2018 ஞாயிறு 04:01 | பார்வைகள் : 13604
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. நிறுவனம் பல்வேறு மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த சில மாதங்களில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 6.1, நோக்கியா 5.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 2.1 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை வெளியிட ஹெச்.எம்.டி. தயாராகி இருக்கிறது.
புதி ஸ்மார்ட்போன் மாடல் குறித்து ஹெச்.எம்.டி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X7 தான் என்ற வாக்கில் இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன் நோக்கியா X5 மற்றும் X6 மாடல்கள் சீனாவில் வெளியான பின் சர்வதேச சந்தைகளில் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்த வகையில் இம்முறை நோக்கியா X7 மாடல் நோக்கியா 7.1 பிளஸ் என்ற பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் டீசர் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் முன்புறம் கேமரா ஆப் திறக்கப்பட்ட நிலையில் இருக்கும் திரை தெரிகிறது. மேலும் குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான புகைப்படம் எடுக்க ஏதுவான அம்சங்கள் நிறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
புகைப்படத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 19:9 ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதில் நாட்ச் இருக்குமா என்பது குறித்து எவ்வித விவரங்களும் இடம்பெறவில்லை.
கடந்த சில மாதங்களில் நோக்கியா X7 விவரங்கள் சிலமுறை வெளியாகி இருக்கிறது. கடந்த மாதம் X7 மாடலின் டிஸ்ப்ளே பேனல் புகைப்படம் லீக் ஆகியிருந்தது. இதில் நோக்கியா X5 மற்றும் X6 மாடலை போன்று நாட்ச் பேனல் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த மாடல் நோக்கியா ஃபீனிக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire