WhatsAppஇல் புது அப்டேட் விரைவில் அறிமுகம்!
26 பங்குனி 2018 திங்கள் 07:24 | பார்வைகள் : 13676
பேஸ்புக்கின் வாட்ஸ்அப் பீட்டா செயலிக்கான புதிய அப்டேட்டில் தேடல் அம்சம் எளிமையாக்கப்பட்டுள்ளது. புதிய சர்ச் அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்ப் பீட்டா டெஸ்டர்களுக்கான புதிய அப்டேட் வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜிஃப்களை தேட வழி செய்கிறது. புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பீட்டாவுக்கான வாட்ஸ்அப் 2.18.93 பதிப்பில் ஜிஃப்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தேட வாடிக்கையாளர்களுக்கு வழி செய்கிறது. WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிய அம்சம் டெவலப்பர்களால் டிசேபிள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக புதிய அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரிவுகள் மட்டும் உருவாக்கப்பட்டு இருக்கிறது, வரும் நாட்களில் மேலும் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸ்டு ஜிஃப் சர்ச் அம்சத்திலேயே புக்மார்க் செய்யும் வசதியும் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய அம்சம் தற்காலிகமாக டிசேபிள் செய்யப்பட்டு இருப்பதால், 2.18.93 பதிப்பில் அப்டேட் செய்த பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு இருக்காது, எனினும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய அம்சம் தவிர புதிய அப்டேட் சிறியது தான் என்றும் மற்றப்படி குறிப்பித்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire