BTS மற்றும் préparatoire படிப்புகளுகளுக்கு கட்டணம்: 2027 முதல் புதிய திட்டம்!!

BTS மற்றும் préparatoire படிப்புகளுகளுக்கு கட்டணம்: 2027 முதல் புதிய திட்டம்!!

1 ஐப்பசி 2026 வியாழன் 20:45 | பார்வைகள் : 1383


அரசு, உதவித்தொகை பெறாத மாணவர்களுக்கு BTS மற்றும் grandes écoles-க்கான préparatoire (CPGE) வகுப்புகளில் சேர்க்கைக் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டு முதல் BTS மாணவர்களுக்கு ஆண்டுக்கு 178 யூரோக்களும், prépa மாணவர்களுக்கு 270 யூரோக்களும் கட்டணம் வசூலிக்கப்படலாம். தற்போது இலவசமாக உள்ள இந்தப் படிப்புகளுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படுவது, உயர்கல்வியில் நிலவும் கட்டண முறையை ஒரே மாதிரியாக்கும் முயற்சியாக அரசு விளக்குகிறது.

préparatoire மாணவர்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து சுமார் 180 யூரோக்கள் கட்டணம் செலுத்துகின்றனர். அதோடு, உதவித்தொகை பெறாத மாணவர்கள் 105 யூரோக்களும் CVEC (Contribution de vie étudiante et de campus) கட்டணமும் செலுத்துகின்றனர். இதனால் தற்போது prépa படிப்பின் ஆண்டு செலவு சுமார் 285 யூரோக்களாக உள்ளது; புதிய 270 யூரோக்கள் கட்டணம் அமல்படுத்தப்பட்டால், மொத்தம் சுமார் 555 யூரோக்களாக உயரக்கூடும்.

இந்தக் கட்டணங்களில் இருந்து உதவித்தொகை பெறும் மாணவர்கள், Nation மற்றும் République-ன் பாதுகாப்பில் உள்ள சிறுவர்கள், அகதிகள் மற்றும் தஞ்சம் கோரியவர்கள் விலக்கு பெறுவார்கள். CPGE மற்றும் BTS மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விச் செலவு மற்ற உயர்கல்விப் பிரிவுகளைவிட அதிகம் என அரசு கூறுகிறது: ஒரு மாணவருக்கு CPGE-யில் சராசரியாக 19,000 யூரோக்களும், BTS-யில் 17,000 யூரோக்களும், பல்கலைக்கழகத்தில் 12,500 யூரோக்களும் செலவாகிறது.

மேலும், préparatoire மற்றும் BTS மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு CPGE-யில் சுமார் 87,000 மாணவர்களும், BTS-யில் 217,000 மாணவர்களும் இருந்தனர். CPGE மாணவர்களின் எண்ணிக்கை 1980ஆம் ஆண்டின் சுமார் 40,000 இலிருந்து இன்று 87,000 ஆக உயர்ந்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டணங்கள் பணவீக்கத்துக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்படும் என அரசு தெரிவித்துள்ளது; ஆனால் அரசுக்கு தேசிய சபையில் பெரும்பான்மை இல்லாததால், இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதத்தை எதிர்கொள்ளக்கூடும்.

தொடர்ந்து படிக்க